கட்டப்பாவ காணோம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான படம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

கட்டப்பாவ காணோம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான படம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்'. இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, 


'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. 

இதில் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றேன். மேலும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதே சமயத்தில் தனித்துவமான ஒரு காட்சி இருக்கின்றது. எங்கள்  காதலை பற்றி நான் கதாநாயகனின் தந்தையிடம் சொல்ல போகும் போது, நிலைமை முழுவதுமாக மாறி விடுகின்றது. நிச்சயமாக இந்த காட்சி ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்று உற்சாகமாக கூறினார்.

இப்படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் இப்படத்தை வெளியிடுகிறார்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions