ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

Bookmark and Share

ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

ஐஸ்வர்யாராய் கடைசியாக 'குஷாரிஷ்' என்ற படத்தில் நடித்தார். 2010–ல் இப்படம் வந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. மகள் ஆரத்யாவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. உடம்பும் எடை போட்டது.

இந்த நிலையில் இந்தி டைரக்டர் சஞ்சய் குப்தா சமீபத்தில் ஐஸ்வர்யாராயை அணுகி ஒரு கதை சொன்னார். அது ஐஸ்வர்யாராய்க்கு பிடித்து போனது. நடிக்க சம்மதித்தார். இதையடுத்து கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்துள்ளார். அவர் நடிக்கும் படத்துக்கு ‘ஜாஸ்பா’ என பெயரிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று காலை துவங்கியது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது.

இந்த படம் குறித்து டைரக்டர் சஞ்சய்குப்தா கூறியதாவது:–

‘ஜாஸ்பா’ படத்தில் ஐஸ்வர்யாராய் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன் இதுபோன்ற கேரக்டரில் அவர் நடித்தது இல்லை. எனவே வக்கீல் கேரக்டருக்காக பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளார். வக்கீல்களை சந்தித்து அவர்களின் உடல் மொழி பேசும் திறன் போன்றவற்றை தெரிந்து கொண்டார்.

கோர்ட்டில் வாதாடும் போது கைகளை எப்படி ஆட்டி, தட்டி பேசுவார்கள் என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொண்டார். படங்களில் வரும் நீதிமன்ற காட்சிகளையும் கவனமாக பார்த்தார். தன்னை கேரக்டருக்கு பொருத்தமானவராக மெருகேற்றி உள்ளார். முன்பை விட அழகாகவும் இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions