சம்பள பாக்கிக்கு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரும் ஐஸ்வர்யாராய்!

Bookmark and Share

சம்பள பாக்கிக்கு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரும் ஐஸ்வர்யாராய்!

நடிகை ஐஸ்வர்யாராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் நடித்த ஜாஸ்பா படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் பேசப்பட்டது. அதில் ஒரு கோடி படத்தின் பூஜை அன்றே கொடுக்கப்பட்டது. மீதி 2 கோடியை படம் முடிந்ததும் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் படம் தயாரிப்பில் இருந்தபோதே நிதி சிக்கலில் சிக்கிய தயாரிப்பாளர் படத்தை வெளியிடவே திணறினார். படம் முடிந்தும் சம்பளம் கொடுக்காதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்கவில்லை. 

வழக்கு தொடர்ந்து பட ரிலீசை நிறுத்த நினைத்த ஐஸ்வர்யாராய் பின் திரைப்பட முன்னணியினர் பேச்சுவார்த்தை நடத்தி படம் ரிலீசானதும் வருகிற லாபத்திலிருந்து மீதி சம்பளம் தரப்படும் என்று சமாதானம் செய்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக படம் ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளராலும் சம்பளத்தை கொடுக்க இயலவில்லை ஆனால் ஐஸ்வர்யாராய்  தரப்பில்,“ படம் ஓடவில்லை என்றாலும் தயாரிப்பு செலவை விட கூடுதலாக படம் வசூலித்துள்ளது.

ஆனால் தயாரிப்பாளர்தான் சம்பளம் தரமல் ஏமாற்ற பார்க்கிறார்” என்று ஐஸ்வர்யராய் கூறுகிறார். இதனால் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்து சம்பளத்தை பெற சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யாராய்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions