பாடகராகவும் அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா ராய்

Bookmark and Share

பாடகராகவும் அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை – குடும்பத்தில் முழு கவனம் செலுத்திய அவர் சமீபத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்துள்ள இந்தி படமான ‘ஜஸ்பா’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் இவர் உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் இளம் நடிகைகளையும் மிஞ்சும் அளவு துடிப்பாக உடற்பயிற்சி செய்கிறார். இவருக்கு 41 வயதா? என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விதவிதமான உடற்பயிற்சியை செய்கிறாராம். ‘ஜாஸ்பா’ படத்தில் பஞ்தெயா என்ற ஆண் குரல் பாடலை ஜுபின் நவுதியால் பாடி இருக்கிறார். இதே பாடலை பட அறிமுகத்துக்காக ஐஸ்வர்யாராயும் பாடுகிறார்.

இதன் மூலம் நடிப்பில் சாதனை படைக்கும் இவர் பாடலிலும் ‘தூள்’ கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பாடும் படத்தின் அறிமுக பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘ஜாஸ்பா’ படம் நன்றாக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னையில் நடந்த கால்பந்து போட்டி தொடக்க விழாவில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா இந்தி பட உலகின் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். அவரிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் படையெடுக்க தொடங்கி விட்டதாக மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Post your comment

Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions