சமூக வலைத்தளத்தால் மக்கள் சோம்பேறிகளாகி விட்டனர்: ஐஸ்வர்யாராய்

Bookmark and Share

சமூக வலைத்தளத்தால் மக்கள் சோம்பேறிகளாகி விட்டனர்: ஐஸ்வர்யாராய்

இதுகுறித்து ஐஸ்வர்யாராய் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“செல்போன் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தங்களுக்கு மக்கள் அடிமைகளாகி விட்டனர். எப்போதும் செல்போனும் கையுமாகவே திரிகிறார்கள். வாரத்தில் 7 நாட்களும் ஒரு நாளில் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். யாராவது தன்னிடம் பேசினால் அவர்களுக்கு பதில் சொல்ல கூட நேரம் இல்லாமல் காதுகளில் போனை வைத்து தீவிரமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

மனிதர்களை விட போன்களுக்கு தான் மதிப்பு கொடுக்கிறார்கள். சாப்பிடும் போதும் போன்தான். ஒரு கையை காதில் போனை அழுத்தி பிடித்து பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். ஏதேனும் பொருட்கள் கீழே விழுந்தால் கூட குனிந்து எடுப்பது இல்லை.வீடு, அலுவலகங்கள், ஓட்டல்கள் என்று எங்கு இருந்தாலும் பேஸ்புக், டுவிட்டர், போன் என்றுதான் மூழ்கி கிடக்கிறார்கள்.

24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களோடுத்தான் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களால் அவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரும் இதற்கு அடிமைகளாகி விட்டனர். இதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இது தொடர்வது சமூகத்துக்கு நல்லது அல்ல. சமூக வலைத்தளங்கள் பிடியில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”
இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார். 


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions