அமலா பாலின் அடுத்த ரவுண்ட்...!

Bookmark and Share

அமலா பாலின் அடுத்த ரவுண்ட்...!

நடிகைகளுக்குப் பொதுவாக திருமணம் நடைபெற்று விட்டது என்றாலே, அதன் பின் அவர்களை நாயகியாக நடிக்க வைக்கப் பலரும் தயங்குவார்கள். ஆண்டாண்டு காலமாக அதுதான் நடந்து வருகிறது.

காலம் மாற மாற அந்த எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. திருமணம் முடிந்தும் ஒரு சில நட்சத்திரங்கள் தற்போதும் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்தியில் ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பின்னும் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். வித்யாபாலன் திருமணமான பின்னும் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்த அமலா பால் கடந்த ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் அவர் நாயகியாகவே நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நாயகியாக நடித்த 'மிலி' திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவந்தது. அடுத்து மோகன்லால் ஜோடியாக நடித்துள்ள 'லைலா ஓ லைலா' அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

கடந்த மாதம் அவர் முன்னமே நடித்திருந்த 'ஜன்ட பை கபிராஜு' தெலுங்குப் படம் வெளியானது. தமிழில் சூர்யா ஜோடியாக பாண்டிராஜ் இயக்கத்தில் 'ஹைக்கூ' படத்தில் நடித்து வருகிறார்.  

மேலும் சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இனி, திரையுலகில் திருமணம் என்பது நடிகைகளுக்கு ஒரு ராசித் தடையாக இருக்கப் போவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions