ஐஸ்வர்யாராயிடம் மன்னிப்பு கேட்ட ஹீரோ

Bookmark and Share

ஐஸ்வர்யாராயிடம் மன்னிப்பு கேட்ட ஹீரோ

சீனியர் நடிகர்களை ஜூனியர் நடிகர்கள் தாக்குவதுபோல் நடிக்கும்போது தர்மசங்கடத்துக்கு ஆளாவது வழக்கம். இதனால் நிறைய டேக் வேஸ்ட் ஆவதுண்டு. ‘மன்னன்‘ படத்தில் ரஜினியின் கன்னத்தில் கதாநாயகி அறைவதுபோல் சீன் இருந்தது. இதில் நடிக்க விஜயசாந்தி தயங்கினார். கதைக்கு அவசியம் என்பதால் கடைசியாக அதில் நடித்தார். இப்படியொரு சம்பவம் பாலிவுட்டில் சமீபத்தில் நடந்திருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு நீண்ட நாள் கழித்து ‘ஜஸ்பா' இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய். சீனியர் நடிகையான அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயல்வதுபோன்ற காட்சியில் ஜூனியர் நடிகர் சந்தன் ராய் சான்யால் நடிக்க வேண்டி இருந்தது. இயக்குனர் சஞ்சய் குப்தா காட்சியை விளக்கிவிட்டு படமாக்க தயாரானார். ஆனால் சந்தன் தயக்கத்துடன் நின்றிருந்தார். ஐஸ்வர்யாராயின் கழுத்தை நான் எப்படி நெரிப்பது போல் நடிப்பது என்று பயந்தார்.

காட்சியில் நடிப்பதற்கு முன் ஐஸ்வர்யாராயிடம் சென்று, 'உங்களை கழுத்தில் கைவைத்து நெரிப்பதுபோல் நடிக்க தயக்கமாக இருக்கிறது. காயம்பட்டுவிட்டால் என்ன செய்வது' என்று சொன்னதுடன் அப்படி நடிப்பதற்காக மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கேட்டு சிரித்துவிட்டாராம் ஐஸ்வர்யா. 'இப்படித்தான் நடிக்க வேண்டும்' என்று அவர் கையை தன் கழுத்தில் வைத்து நெரிப்பதுபோல் செய்து காட்டி அவரது பயத்தை போக்கினார். அதன்பிறகே அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனாலும் 5 டேக் முடிந்தபிறகே காட்சி ஓகே ஆனது.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions