நகைக்கடை விளம்பரம் சர்ச்சை - ஐஸ்வர்யா ராய் பதில்!

Bookmark and Share

நகைக்கடை விளம்பரம் சர்ச்சை - ஐஸ்வர்யா ராய் பதில்!

பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த நகைக்கடை ஒன்றின் சமீபத்திய விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, அது அந்த விளம்பர படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் திரும்பியுள்ளது.

அப்படி என்ன அந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது..? விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய், மகாராணி போன்று ஒரு ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் கருப்பு நிறத்திலான சிறுமி ஒருவர் குடை  பிடித்து நிற்கிறார்.

இதுதான் சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது இந்த விளம்பரம் இனவெறியை வெளிப்படுத்துவதாகவும், சிறார்களின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் நடித்த விளம்பரம் ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியதை தொடர்ந்து அதற்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன்.

இந்த விளம்பரத்தின் போது ஷூட்டிங் எடுக்கப்பட்ட படம் இதுதான். பின்னர் இதை அந்த சிறுமி படத்தோடு இணைத்துள்ளனர். ஒரு விளம்பரம் எப்படி அமைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிரியேட்டர் தான் முடிவு செய்கிறார்.

இதில் நான் என்ன செய்ய முடியும். இருந்தாலும், உங்களது கருத்துக்களை சம்பந்தப்பட குழுவினருக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்கும்படி கேட்டுள்ளேன். இவ்வாறு ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

இதனிடையே விளம்பரத்திற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அந்த விளம்பரத்தை நீக்குவதவாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions