கேன்சை கலக்கும் ஐஸ்வர்யா ராய்

Bookmark and Share

கேன்சை கலக்கும் ஐஸ்வர்யா ராய்

உலகம் பெரும் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பிலிம் பெஸ்டிவல் கடந்த 13ந் தேதி தொடங்கியது. வருகிற 24ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலிமிருந்து திரையுலக ஜாம்பவான்கள் குவிந்துள்ளார். இந்தியாவில் பாலிவுட்டிலிருந்தும் நட்சத்திரங்கள் படையெடுத்துள்ளனர். இந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஸ்டார் அட்ராக்ஷன் ஐஸ்வர்யாராய்தான்.

நேற்று முன்தினம் பிரான்ஸ் போய்ச் சேர்ந்த ஐஸ்வர்யா அன்று முழுவதும் திரைப்படம் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்.

பாலிவுட், ஹாலிவுட் நடத்திரங்கள் சல்மா ஹெக், பார்கர் போகோ, எலிசபெத் சல்சர், கிறிஸ்டின் லேச்சருடன் கலந்து கொண்ட பொது விவாதத்தில் பாலியல் சமத்துவம் குறித்து பேசினார்.

கேன்ஸ திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா லாரியல் என்ற அழகுதான தயாரிப்பு நிறுவனத்தின் அம்பாசிடராக கலந்து கொண்டார். நேற்று காலை ரெட்கார்பெட் வரவேற்புக்கு வந்தார் ஐஸ்வர்யா. பச்சை நிற உடை அணிந்து அதற்கு ஏற்ப பச்சை நிறத்தில் கண்மை அணிந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் அழகை, இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து வந்திருந்து நூற்றுக் கணக்கான புகைப்பட கலைஞர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர்.

ஐஸ்வர்யாராய் ரெட்கார்பெட்டில் நடந்து கொண்டிருந்போது அங்கு அவரது அபிமான ஹாலிவுட் நடிகை ஈவா ஸ்கோரியா வந்தார். அவரை கட்டித் தழுவிய ஐஸ்வர்யா போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரெட் கார்பெட் வரவேற்பில் செல்பி எடுக்ககூடாது என்கிற மரபை மீறி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இனி அடுத்து வரும் நாட்களிலும் ஐஸ்வர்யாவின் அழகு அதிரடிகள் காத்திருக்கிறது.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions