இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்

Bookmark and Share

இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்

வட சென்னை படத்தில் நடிப்பதன் மூலம் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு தாயாக நடித்து அனைவரையும் அசத்தினார்.

நடிக்கத் தெரிந்தாலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தது.

கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பெரிய ஹீரோவுடன் நடிக்க விரும்பிய அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசைப்பட்டது போன்று பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துவிட்டாரே என்று பலரும் வியந்தபோதே அவருக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கி வரும் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேற அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது.

தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன். அந்த கனவு வட சென்னை படம் மூலம் நிறைவேறியுள்ளது என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய் பெயரை கெடுத்த இயக்குனர், உச்சக்கட்ட கோபம்
ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
அச்சச்சோ இதெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது? - போட்டோ பாருங்க.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions