லூத்புதின் பாஷா படபிடிப்பு தளத்தில் மிகவும் பதற்றத்தோடு இருந்தார் – ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Bookmark and Share

லூத்புதின் பாஷா படபிடிப்பு தளத்தில் மிகவும் பதற்றத்தோடு இருந்தார் – ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

பறந்து செல்ல வா திரைப்படம் வெளியாக யுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் நாசர் அவர்களின் மகன் லூத்புதீன் பாஷா  நடித்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் லூத்புதினிக்கு இது முதல் படமாகும்.  படபிடிப்பு தளத்தில் அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார் பின்பு நான் அவரோடு நட்புடன் பழகிய பின்பு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். படபிடிப்பு மிக சிறந்த முறையில் நடந்தது. இப்படத்தை இயக்குநர் தனபால் இயக்கியுள்ளார்.இதில் நரேல்கேங் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன், & ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர்  நடித்துள்ளனர் .

இவர்களால் நகைச்சுவை காட்சிகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது.  இந்த படத்தின் காட்சிகளை அனைத்தும் சிங்கப்பூரில்  படமாக்கபட்டுள்ளது. இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் புதிய விதத்தில் படமாக்கியுள்ளோம்.தமிழ்சினிமா ராசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.  

இப்படத்தில் நான் ஒரு மார்டன் கேர்ள் ஆக நடித்து இருக்கிறேன். இப்படத்தின் ஒளிப்பதிவுக்கு பிரபாகர் மற்றும்  சந்தோஷ் பொறுப்பு. ஒவ்வொரு காட்சியும்  மிக சிறப்பாக வந்துள்ளது. படத்தின் காட்சிகள் மதுரை, தேனி. மேலும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக என்னுடைய படத்திற்காக சிங்கபூருக்கு படபிடிப்பிற்க்கு  சென்றது இதுவே முதல்முறையாகும். இப்படத்தின் இயக்குநர் தனபால் இதற்க்கு முன்னரே நல்ல படம் ஒன்றை இயக்கியுள்ளார் படத்தின் பெயர் கிருஷ்ணவேனி பஞ்சாலை . அப்படம் கிராமத்தை சார்ந்த கதை.

இப்படம் முழுவதும் நகரம் சார்ந்து கதை சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் இயக்குநருக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்திற்கு ஜோஸ்வாஸ் ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார் அவர் காதல் திரைப்படதிற்கு இசை அமைத்தவர் காதல் திரைப்படத்தின் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுபோல் இப்படத்திலும் அனைத்து பாடல்களும் மிக சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தை  தயாரிப்பாளர் அருமை சந்திரன்  தயாரித்துள்ளார். மிக சிறந்த முறையில் தயாரிப்புக்கு தேவையான அனைத்தையும் கவனத்தோடு செய்துகொடுத்தார்..

நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை திரையரங்கில் வந்து காணும் படி கேட்டுகொள்கிறேன் நன்றி என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Post your comment





Related News
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
ஐஸ்வர்யா தனுஷ் கொடுக்கப்போகும் ஷாக்
கார்ட்டூன் தொடர்களில் சதி இருக்கிறது: நடிகர் ராஜேஷ்
ஐஸ்வர்யா ராய் யால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன அமிதாப் மனைவி ஜெயாபச்சன்
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
முன்னணி நடிகருடன் 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions