தனுஷிடம் சான்ஸ் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

தனுஷிடம் சான்ஸ் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

ரம்மி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு இவர் நடித்து வெளியான திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு படங்களுமே பெரிதாக ஓடவில்லைதான்.

என்றாலும், தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் நடித்த காக்கா முட்டை படம் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறது.

அதோடு, அவரது பர்பாமென்ஸ் குறித்து கோலிவுட் முன்னணி இயக்குனர்களே பாராட்டி வருகின்றனர். மேலும், காக்கா முட்டையில் அவரை நடிக்க வைத்த இயக்குனர் மணிகண்டன் அவரது நடிப்புத்திறமையைப்பார்த்து அதையடுத்து விதார்த்தைக்கொண்டு இயக்கி வரும் குற்றமும் தண்டனையும் படத்திலும் ஐஸ்வர்யாவையே நடிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், காக்காமுட்டை படம் தேசிய விருது பெற்ற பிறகு தனுஷை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷை அவரும் பாராட்டினாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு, உங்கள் நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருந்தது. தொடர்ந்து இதை விடவும் சிறப்பாக நடிக்க வாழ்த்துகிறேன் என்றாராம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நான் உங்களது தீவிரமான ரசிகை. அதனால் உங்களுடன் டூயட் பாட எனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஒரு அப்ளிகேசனை அவர் முன்பு வைத்தாராம் ஐஸ்வர்யா.

இதனால் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்ட தனுஷ், சினிமாவில் எல்லாவற்றையும் கதைதான் தீர்மானிக்கிறது. அதனால் உங்களுக்கேற்ற கதை கிடைக்கும்போது கண்டிப்பாக வாய்ப்பு தேடி வரும் என்று சொல்லி அப்போதைக்கு ஐஸ்வர்யாவை சமாளித்தாராம் தனுஷ்.

 


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions