மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்

Bookmark and Share

மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்

சென்னை: விளம்பரம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், புதுமுக நடிகை ஹைராவுக்கும் இடையே சண்டையாம்.ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோரின் பேரன் அபினய் நடித்து வரும் விளம்பரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், புதுமுகம் ஹைரா என இரண்டு ஹீரோயின்கள்.

படப்பிடிப்பின்போது இரண்டு ஹீரோயின்களுக்கு இடையே சண்டை.காட்சிப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் ஆடுவார். அப்போது ஹைரா அவருக்கு கொலுசு மாட்டிவிட வேண்டும். இந்த காட்சியின்போது ஐஸ்வர்யாவுக்கு கொலுசு மாட்டிவிட மறுத்தார் ஹைரா.

ஹைராவின் செயலை பார்த்த ஐஸ்வர்யாவோ அவர் கொலுசு மாட்டிவிடாவிட்டால் பரவாயில்லை. நாம் காட்சியை வேறு விதமாக மாற்றி படமாக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.ஹீரோயின்களுக்கு இடையேயான பிரச்சனையை பார்த்து இயக்குனர் சாய் சூர்யா கடுப்பாகியுள்ளார்.

ஒழுங்கா கொலுசை மாட்டிவிடுங்க என்று ஹைராவை இயக்குனர் கண்டித்துள்ளார்.இயக்குனர் கண்டித்த பிறகு வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் காலில் கொலுசை மாட்டிவிட்டுள்ளார் ஹைரா.

மேக்கப் அறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இரண்டு ஹீரோயின்களும் முரண்டு பிடித்துள்ளனர். அது என்ன பிரச்சனை என்பது தெரியவில்லையாம்.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
சிரஞ்சீவிக்கு ஜோடியான பிரபல உலக அழகி
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions