சாவுக் கூத்தை சென்டிமென்டாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

சாவுக் கூத்தை சென்டிமென்டாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமானர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டக்கத்தி படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சரியான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஐஸ்வர்யா, ‘காக்கா முட்டை’ படத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இப்படத்தில் இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் சுந்தர்.சி - குஷ்பூ இணைந்து தயாரித்து வரும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்தி, ஒரு நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.

‘ரம்மி’, ‘காக்காமுட்டை’ ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்த ஐஸ்வர்யா, இப்படத்தில் சாவுக்கூத்து நடனம் எல்லாம் ஆடியிருக்கிறாராம். ஏற்கெனவே, ‘அட்டக்கத்தி’ படத்திலும் இவர் சாவுக் கூத்து ஆடியிருப்பார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுபோல், இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இப்படத்தில் இன்னொரு நாயகியாக ஓவியாவும் நடிக்கிறார். அதனால், யார் இப்படத்தில் பேயாக நடிக்கிறீர்கள்? என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டதற்கு, அதை படத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு தப்பித்துவிட்டார். இன்று இப்படத்தின் ஆடியோ இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions