மாற்றிப் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

மாற்றிப் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, ரம்மி படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற கூடமேல கூட வச்சி என்ற பாடல் ஐஸ்வர்யா ராஜேஷை பிரபலப்படுத்தியது.

அதையடுத்து, அதே விஜயசேதுபதிக்கு ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் தனுஷ், வெற்றி மாறன் இருவரும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை என்ற படத்திலும் நடித்தார். அப்படத்தில் 35 வயது சேரிப்பெண்ணாக தனது உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார் அவர்.

அதனால் நடித்து முடித்த பிறகு இந்த படத்தினால் தனது ஹீரோயினி இமேஜ் பாதிக்கப்படுமோ என்றும் பயந்தார். ஆனால், அந்த படம் உடனடியாக வெளியே வரவில்லை.

அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதையடுத்து திருடன் போலீஸ் உள்பட சில படங்களில் கமிட்டாகி நடித்தார். இந்தநிலையில், கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு ஒன்றரை வருடத்துக்கு பிறகு தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பப்பட்ட காக்கா முட்டை இப்போது தேசிய விருது பெற்றிருக்கிறது. இதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

முக்கியமாக பாரதிராஜா, பாலா உள்ளிட்ட இயக்குனர்களே பாராட்டியிருப்பதால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விளைவு, இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் பயந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாராஜேஷ், இப்போது காக்கா முட்டையில் நடித்தது குறித்து பெருமையாக பேசிக்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, இந்த படத்தில் நடித்ததற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். இதில் நடித்தபோதே இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்ததுண்டு என்று சூழ்நிலைக்கேற்ப மாற்றிப்பேசி வருகிறார் நடிகை.

 


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions