
சென்னை: கிளாமராக நடித்தாலும் தொப்புளை காட்ட மாட்டேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அட்டக்கத்தி படம் மூலம் பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா ராஜோஷ்.
காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக அருமையாக நடித்திருந்தார். தர்மதுரை படத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில்,
காக்கா முட்டை காக்கா முட்டை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மோ பேய் படம் என்றாலும் பிற பேய் படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.
மோ
மோ படத்தில் நான் தான் பேயா என்று பலரும் கேட்கிறார்கள். படத்தை பார்த்தால் அது தெரியும். அது என்ன படத்தின் தலைப்பு மோ என்கிறார்கள். அதுவும் சஸ்பென்ஸ்.
கிளாமர்
பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன்.
ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை.
ஐஸ்வர்யா
புவன் ஆர் நுலன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மோ படம் இன்று வெளியாகியுள்ளது. பேய் படங்கள் என்றால் கோலிவுட் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் வேளையில் மோ ரிலீஸாகியுள்ளது.
Post your comment