நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!

Bookmark and Share

நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணராஜ் ராய் உயிரிழந்தார்.

ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். இந்நிலையில் தந்தையின் பிரிவால் அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார். கிருஷ்ணராஜ் ராய், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
ஐசியுவில் ஐஸ்வர்யா ராயின் தந்தை: நிலைமை கவலைக்கிடம்
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
ஐஸ்வர்யா ராய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
கேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..!
மசாலாவில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்: சட்ட நடவடிக்கை எடுக்க அபிஷேக் முடிவு..!
\"ஐஸ்வர்யாராயும் ஆயிரம் காக்காவும்\"..!
ஐ.நா.சபையில் உலக அமைதிக்காக உரையாற்றிய‌ ஐஸ்வர்யாராய்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions