ஐஸ்வர்யா ராய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஐஸ்வர்யா ராய் தற்போது இந்தியில் ‘ஜாஸ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறாராம். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை இந்தி சினிமாவில் பிரபல இயக்குனர் சஞ்சய் குப்தா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐஸ்வர்யா ராய், கறுப்பு கலர் சுடிதாரில் மணலில் புரண்டு எழுந்தது மாதிரியான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் வக்கீலாக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன், இர்பான் கான், ஷபானா ஆஸ்மி, ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இது தென்கொரிய படமான ‘செவன் டேஸ்’ படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!
ஐசியுவில் ஐஸ்வர்யா ராயின் தந்தை: நிலைமை கவலைக்கிடம்
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
கேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..!
மசாலாவில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்: சட்ட நடவடிக்கை எடுக்க அபிஷேக் முடிவு..!
\"ஐஸ்வர்யாராயும் ஆயிரம் காக்காவும்\"..!
ஐ.நா.சபையில் உலக அமைதிக்காக உரையாற்றிய‌ ஐஸ்வர்யாராய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions