வெளிநாட்டில் மறைமுகமாக முதலீடு செய்த விவகாரம்: கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!

Bookmark and Share

வெளிநாட்டில் மறைமுகமாக முதலீடு செய்த விவகாரம்: கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!

பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயரும் அடிபட்டது. இந்த குற்றச்சாட்டை அமிதாப்பச்சன் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில், நேற்று மும்பையில் ‘சரப்ஜித்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம், இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு கருத்து கூற மறுத்த அவர், ‘‘இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

அதை பற்றி உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்’’ என்றார். அந்த அறிக்கை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் மட்டும் தான் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions