தந்தைக்கு விருது அறிவிக்கப்பட்ட செய்தி கேட்டதும் ஆனந்தத்தில் மூழ்கிவிட்டோம்: ஐஸ்வர்யா தனுஷ் பேட்டி

Bookmark and Share

தந்தைக்கு விருது அறிவிக்கப்பட்ட செய்தி கேட்டதும் ஆனந்தத்தில் மூழ்கிவிட்டோம்: ஐஸ்வர்யா தனுஷ் பேட்டி

பொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

பத்ம விருதுகளில் ‘பாரத ரத்னா’ விருது மிக உயரிய விருதாகும். அதற்கு அடுத்ததாக பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. 

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு தற்போது அறிவித்து வருகிறது. கடந்த சில தினங்களாக பத்ம விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு நடந்து வந்தது. 

இதில் பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வாகியுள்ளார். அவருடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ராமோஜி ராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் மறைந்த திருபாய் அம்பானி ஆகியோர் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். 

தனது தந்தைக்கு விருது அறிவிக்கப்பட்டது அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம். இந்த மரியாதைக்கு மிக்க நன்றி. அரசிடம் இருந்து போன் வந்திருந்த போது நானும் எனது தங்கையும் போயஸ் கார்டனில் உள்ள அப்பாவில் இல்லத்தில் தான் இருந்தோம். 

இந்த செய்தி பரவியதும் எங்களுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தது. தற்போது அப்பா வீட்டில் இல்லை. படப்பிடிப்பில் உள்ளார். தொலைபேசியை எடுத்து பேசுவதில் நாங்கள் இப்போது மும்மரமாக உள்ளோம்(சிரித்துக் கொண்டே). இவ்வாறு தெரிவித்தார். 

அதேபோல் ”அப்பா இனி பத்ம விபூஷன் ஸ்ரீ ரஜினிகாந்த். அவரது மகள் என்பதில் பெருமையாக உள்ளது.” என்று அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, நடிகரும் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுசும் டுவிட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions