த்ரிஷ்யம் கதைக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன் : அஜய் தேவ்கன்

Bookmark and Share

த்ரிஷ்யம் கதைக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன் : அஜய் தேவ்கன்

த்ரிஷ்யம் திரைப்படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, விரைவில், அந்த படம் பாலிவுட்டிலும் வெளியாக உள்ளது. த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படக்குழுவினர், பட புரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் தேவ்கன் கூறியதாவது, இதுபோன்ற கதையை தான், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தேன்.

தான் இதுவரை, மசாலா காமெடி மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளேன்.

சீரியசான படங்களை நான் வேண்டுமென்றே தவிர்த்து வந்துகொண்டிருந்தேன். இந்நிலையில் தான் த்ரிஷ்யம் படத்தின் கதையை கேள்விப்பட்டேன்.

இந்த படத்திற்காக தான், தான் இதுவரை சீரியஸ் கதைகளில் நடிக்கவில்லையோ என்று எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். த்ரிஷ்யம் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று அஜய் தேவ்கன் கூறினார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை!
படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions