அப்புக்குட்டியின் வளர்ச்சி பாதையை மாற்றிய அஜித்!

Bookmark and Share

அப்புக்குட்டியின் வளர்ச்சி பாதையை மாற்றிய அஜித்!

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவநாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார். அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியத்தை விட அந்த புகைப் படங்களை எடுத்தவர் தான் வரை ஆச்சரியப் படுத்தினார். ஆமாம், நடிகர் அஜீத் குமார்தான் அவரை புகைப்படம் எடுத்த புகைப்பட நிபுணர் ஆவார்.

இதுப்பற்றி அப்புக்குட்டி கூறியிருப்பதாவது,, வீரம் படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம் தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

முடிந்த வரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார்.

என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க, யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன். எங்கே, என்ன, எது எனக் கேட்காமல்.

அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது, அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என்னவென்றால், என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்கப்பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கபட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாத படுத்தி இருந்தார்.

ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை. தவிர எனது இயற் பெயரைக் கேட்டு தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவபாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார்.

இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கபடுவதை விரும்புகிறேன். ஒரு கை தேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னை பரவசம் ஊட்டியது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை.

இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம், இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும் என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.


Post your comment

Related News
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions