அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை முதலே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. விஜய் நடித்த ஜில்லா, அஜித் நடித்த வீரம் படங்கள் கடந்த வருட பொங்கல் அன்று வெளியானபோது, அதிகாலை 3 மணியிலிருந்தே காட்சிகள் ஆரம்பமாகின.

அதேபோல் விஜய்யின் கத்தி படத்திற்கும் ரஜினி நடிப்பில் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான லிங்கா படத்திற்கும் இதுபோன்று சிறப்புக்காட்சிகள் நடைபெற்றன.  ஷங்கரின் ஐ படத்திற்கும் அதிகாலை 4.30 மணியிலிருந்தே காட்சிகள் ஆரம்பமாகின.

நாளை அதாவது, பிப்ரவரி 5 அன்று வெளியாகவிருக்கும் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு திரையிடப்படும் என்ற ஆவலில் இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

அதற்கு வாய்ப்புகள் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன. கடந்த வாரம் சென்னையின் சில குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

அதன் காரணமாக தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு காட்சிகளுக்கு சென்னை காவல்துறையிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் என்னை அறிந்தால் படத்தின் முதல் காட்சியே அதிகாலை 5 மணியிலிருந்துதான் துவங்குகிறது. வழக்கமாக சென்னையின் முதல் காட்சி காசி தியேட்டரில்தான் ஆரம்பிக்கும்.

அங்கும் கூட என்னை அறிந்தால் படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்குத்தான் தொடங்குகிறது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions