முதுகில் குத்தியவருக்கு முகவரி காட்டிய அஜித்

Bookmark and Share

முதுகில் குத்தியவருக்கு முகவரி காட்டிய அஜித்

நடிகர் அஜித் இன்று தமிழ் திரையுலகினர் பலரும் அதிகம் விரும்பும் முக்கிய நபர். இவரின் குணங்களே இதற்கு காரணம். அஜித் இன்றைக்கு அனைவரும் வியக்கும் அளவிலான நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு அனுபவமே காரணம்.1995 ல் ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பின் சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் அவ்வளவாக அவர் பிரபலமாகாத சமயம்.1999 ல் மீனாவுடன் நடித்த ஆனந்த பூங்காற்றே வெளியானது. அந்நேரம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது அஜித்க்கு வழங்கப்பட்டது.

விருதை அவருக்கு கொடுக்க நடிகை மீனாவை மேடைக்கு அழைக்கிறார்கள். இவரையும் அஜித்தையும் நடனமாடச்சொல்லி தொகுப்பாளர் கேட்க பலரும் அதிர்ச்சியாகும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது.

மீனாவின் அம்மா மேடைக்கு வந்து அஜித்திடம் என் மகள் ரஜினி, கமலுடன் நடித்தவர், உன்னோடு ஆடினால்பொருத்தமாக இருக்காது என முகத்தில் அரைந்தார் போல் சொல்லிவிட்டு மீனாவை அங்கிருந்து கூட்டிச்சென்றார்.

அவருக்கு மார்க்கெட் உயரும் வேலையில் நடந்த நிகழ்வை பொருட்படுத்தாது சிட்டிசன், வில்லன் ஆகிய படங்களில் மீனாவுடன் நடித்தார். இதன் பின் அழைப்புகள் ஆயிரம் வந்தாலும் எந்த நிகழ்ச்சிகளிலும் இதுவரை அவர் கலந்துகொள்வதில்லை.

ஆனால் தமிழகத்திற்கு மதிப்பு கொடுத்து அரசு விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வழங்கிய விருதை மட்டும் இருமுறை பெற்றார்.

 


Post your comment





Related News
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions