சூரிக்கு அட்வைஸ் சொன்ன அஜித்

Bookmark and Share

சூரிக்கு அட்வைஸ் சொன்ன அஜித்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் நடித்தது குறித்து சூரி கூறும்போது,

‘நான் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் அஜித்துடன் நடித்ததில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது தற்போது இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.

அஜித் என்னிடம், நீ எப்போதும் இப்படியே இருக்க வேண்டும். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. உன் வாழ்க்கை தரத்தை மட்டும் மாற்றிக் கொள். ஆனால் உன்னுடைய சுபாவத்தை மாற்றாதே என்று அறிவுரை கூறினார்’ என்றார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். தங்கையாக லட்சுமி மேனனும் வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவிகிதம் முடிந்துள்ளது. இப்படத்திற்கு ‘வெட்டி விலாஸ்’ என்ற தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions