ஆரவாரம் தலைப்பை ஒகே சொன்ன அஜீத்!

Bookmark and Share

ஆரவாரம் தலைப்பை ஒகே சொன்ன அஜீத்!

அஜித் நடிக்கும் படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டில் ரெடி பண்ணுவதில் தான் அவரை வைத்து படம் இயக்குபவர்களின் பெரிய கடினமான வேலை. 

இதற்கு முன்பு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே உதவி இயக்குனர்கள் கதை விவாதம் போன்று டைட்டில் விவாதமும் நடத்தினர்.

அப்படி அவர்கள் ரெடி பண்ணும் டைட்டில்களை, இந்த டைட்டிலை அஜித் கண்டிப்பாக ஓகே சொல்லிவிடுவார் என்று அவரிடம் கொண்டுசென்றால், அது அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம்.

அந்த வகையில், ஆரம்பம் படத்திற்கு கிட்டத்தட்ட 200 டைட்டில்களுக்கு மேல் அஜித்தின் கவனத்துக்கு அனுப்பிய விஷ்ணுவர்தன், கடைசியில் ஒரு ஐந்து டைட்டில்களை அஜித்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம். 

அதிலிருந்து ஆரம்பம் என்ற டைட்டில் கதைக்கு பொருத்தமானது என்றாராம் அஜீத். அதையடுத்து என்னை அறிந்தால் படத்திற்கு பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது டைட்டில் குறித்து பேசிவந்த அஜித்-கெளதம்மேனன் இருவரும் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல், இந்த டைட்டிலையே வைத்துக்கொள்வோம் என்று ஒருமனதாக என்னை அறிந்தால் டைட்டிலை முடிவு செய்தனர்.

ஆனால், வீரம் படத்தின் டைட்டிலை பூஜையின்போதே அறிவித்து படப்பிடிப்புக்கு சென்ற சிவா, இப்போது அஜித்தின் 56வது படத்திற்கு டைட்டில் வைக்க முடியாமல் தவிக்கிறார். ஏற்கனவே பல டைட்டில்களை அஜித்திடம் சொன்னபோது, அவருக்கு எதுவும் பிடிக்கவில்லையாம். 

அதனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு டைட்டில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருந்த சிவா, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறுவதால், ஆரவாரம், வெறித்தனம், சரவெடி என பல டைட்டில்களை அஜித்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம். அதில் ஆரவாரம் அஜீத்திற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் முறையான அறிவிப்பினை அவர்கள் வெளியிடும்போதுதான் ஆரவாரம் உறுதி செய்யப்பட்ட டைட்டீலா? என்பது தெரியவரும்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions