அஜித்தை வைத்து பாட்ஷா-2 எடுக்க ஆசை : சுரேஷ் கிருஷ்ணா

Bookmark and Share

அஜித்தை வைத்து பாட்ஷா-2 எடுக்க ஆசை : சுரேஷ் கிருஷ்ணா

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த பாட்ஷா படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். மும்பையில் மிகப்பெரிய டானாகவும், சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாகவும் இருவேறு கெட்டப்பில் ரஜினி நடித்திருந்தார். 

பாட்ஷா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 நாட்களையும் தாண்டி வெற்றியடைந்தது. இந்த படத்தை பற்றி சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய ரஜினி, ‘பாட்ஷா’ படத்தை போன்று இன்னொரு படம் எப்போதும் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இதை கேள்விப்பட்ட பாட்ஷா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். 

ரஜினி கருத்து குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, “நான் இயக்கிய படத்தை பற்றி ரஜினியும், மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் கூறுவதுபோல், உண்மையிலேயே ‘பாட்ஷா’ படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது. அந்தளவுக்கு நாங்கள் அணு அணுவாக ரசித்து எடுத்திருந்தோம். அதனால்தான் மக்கள் மனதில் இன்றும் இப்படம் நிலைத்து நிற்கிறது.

அஜித்தை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நான் அஜித்தை சந்தித்து இது குறித்து பேசியது கிடையாது.

அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன்” என்று கூறினார்.

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions