அஜித் சாதனையை முறியடித்த விஜய்

Bookmark and Share

அஜித் சாதனையை முறியடித்த விஜய்

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள புலி படத்தின் டிரைலர் 20 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியான நிமிடத்திலிருந்தே பலரால் பார்த்து ரசிக்கப்பட்ட டிரைலர் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.
இப்போது அந்த சாதனைகளின் மகுடமாக தமிழ்ப் படங்களில் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரே படம் என்ற புதிய சாதனை புரிந்துள்ளது. இதுவரை அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் டீசர் மட்டுமே அதிக லைக்குகளைப் பெற்றதாக இருந்தது. 
அதை புலி டிரைலர் சில தினங்களுக்கு முன்பு முறியடித்துள்ளது. இதுவரை என்னை அறிந்தால் டீசரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 95,667. புலி படத்தின் டிரைலரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 96,853.
அஜித் ரசிகர்கள்தான் ஆன்லைனில் புலிகள் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தார்கள். அந்த சாதனையை விஜய் ரசிகர்கள் முறியடித்து தாங்களும் அப்டேட்டட் ஆக இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளார்கள். 
இந்த சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் புலி படத்தின் டிரைலருக்கு டிஸ்-லைக்கையும் அதிகமாகத் தட்டிவிட்டிருக்கிறார்கள். அந்த விதத்திலும் புலி டிரைலர் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions