அஜித்தின் அடுத்த இயக்குனர்?

Bookmark and Share

அஜித்தின் அடுத்த இயக்குனர்?

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தோடு முடியவுள்ளது. கதைப்படி டாக்சி டிரைவராக அஜித் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக லக்‌ஷ்மிமேனனும் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர்.

இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட முடிவெடுத்திருப்பதால் எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகளும் வெளியாகத் தொடங்கிவிட்டன. ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட சில இயக்குனர்கள் அஜித்திடம் கதை சொல்லியிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், சதுரங்க வேட்டை வினோத் ஆகிய இருவரில் ஒருவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

அஜித் படங்களை தொடர்ச்சியாக ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீஸ் தயாரித்து வந்த நிலையில்,புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். அந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions