அஜித்தின் அடுத்தப் படம் பற்றி புதிய தகவல்...

Bookmark and Share

அஜித்தின் அடுத்தப் படம் பற்றி புதிய தகவல்...

வீரம் சிவா இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத (தல 56) படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தீபாவளி ரிலீஸாக கொண்டுவர திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதற்கான வேகத்தோடு படத்தை எடுத்து முடிக்கும்படி இயக்குநரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து  நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்காக ஒரு படத்தை நடித்து கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியனது.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, அஜித்தின் ஆரம்ப கால நெருங்கிய நண்பர்! அஜித்தை வைத்து முகவரி, வாலி, ரெட். வில்லன் உட்பட பல படங்களை தயாரித்தவர். பிறகு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சமீபகாலத்தில் சக்ரவர்த்தி தயாரித்த சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. அதோடு, சிம்பு நடிப்பில் சக்ரவர்த்தி தயாரித்துள்ள  வாலு திரைப்படமும் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது.

இன்னொரு பக்கம், வேட்டை மன்னன் படமும் ட்ராப்பானதால் சுமார் 10 கோடி நஷ்டப்பட்டிருக்கிறார். இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சக்ரவர்த்திக்கு உதவும் நோக்கத்தோடு அவருக்கு ஒரு படம் நடித்து கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்பட்டது. வாலு படத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க சக்கரவர்த்தி தரப்பிலிருந்து கிளப்பிவிடப்பட்ட கட்டுக்கதை என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படம் பற்றி புதிய தகவல்...  சுசீந்திரன் இயக்கத்தில், வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இதுசம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.!


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions