படப்பிடிப்பில் ஸ்ருதிக்கு போட்டோஷுட் நடத்திய அஜித்

Bookmark and Share

படப்பிடிப்பில் ஸ்ருதிக்கு போட்டோஷுட் நடத்திய அஜித்

அஜித், ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது, ஒரு சிறந்த புகைப்பட கலைஞரும்கூட. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பல்வேறு இயற்கை சூழ்நிலைகளை படம்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பிலும் தனக்கு பிடித்தமான காட்சிகளை தனது கேமராவில் படம் பிடித்து வைப்பார். 

இந்நிலையில், சமீபத்தில் அப்புக்குட்டியை வைத்து ஒரு மிகப்பெரிய போட்டோ ஷுட் நடத்தினார். அஜித் முதன்முறையாக எடுத்த அந்த போட்டோ ஷுட்டில் அப்புக்குட்டியை வெவ்வேறு கெட்டப்புகளில் படம்பிடித்து, அவரை மிகவும் அழகாக காண்பித்திருந்தார். 

அப்புக்குட்டியை வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து தற்போது, இவர் நடித்துவரும் ‘சிறுத்தை’ சிவா படத்திலும் அஜித் ஒரு புகைப்பட கலைஞராக மாறியுள்ளார். 

சமீபத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அஜித் நடிகை ஸ்ருதிஹாசனை வைத்து படப்பிடிப்பிலேயே ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ஸ்ருதிஹாசனை வெவ்வேறு கோணங்களில் அஜித் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித், எடுக்கும் புகைப்படங்களைவிட, அவர் புகைப்படம் எடுக்கும் அழகையே அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions