அஜித்தை பின்னி மில்லுக்குள் விட மறுத்த செக்யூரிட்டிகள்!

Bookmark and Share

அஜித்தை பின்னி மில்லுக்குள் விட மறுத்த செக்யூரிட்டிகள்!

அஜித் நடித்து வரும் அஜித்56வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்றபோது, தினமும் காரில் சென்று இறங்கிய அஜித், ஒருநாள் தனது பைக்கிலேயே நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்றாராம். அப்போது தனது முகத்தை ஹெல்மெட்டால் நன்றாக மறைத்து அவர் சென்றதால் சாலையில் சென்ற எந்த ரசிகர்களும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.

மேலும், பின்னி மில்லில் அஜித் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து, அவர் காரில் வந்து இறங்குவார். அப்போது அவரை பார்த்து விடலாம் என்று ஏராளமான ரசிகர்கள் மில் கேட்டில் கூடியிருந்தார்களாம். ஆனால், அஜித் பைக்கில் சென்றதால் யாருமே அவரை கண்டுகொள்ளவில்லையாம். யாரோ செல்கிறார்கள் என்பதுபோல் நின்றார்களாம்.

அதேபோல், அஜித் கேட் முன்பு போய் நின்றபோது, செக்யூரிட்டிகளும் கதவை திறக்காமல் நின்றார்களாம். அதையடுத்து, அவர் தனது ஹெல்மெட்டை கழற்றியபோது, அவர்கள் ஓடிவந்து கேட்டை திறந்தார்களாம்.

ஆனால், அதற்குள் சுற்றி நின்ற ரசிகர்கள் அஜித்தை முற்றுகையிட, அவர்களிடமிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு அஜித்தை மில்லுக்குள் மீட்டு சென்றார்களாம் செக்யூரிட்டிகள்.

இப்படி படப்பிடிப்பு தளத்துக்கு மட்டுமின்றி, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னைக்குள் அவ்வப்போது பைக்கில், சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அஜித்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions