அஜித்தை வழியை பின் பற்றிய வில்லன் கபீர் சிங்

Bookmark and Share

அஜித்தை வழியை பின் பற்றிய வில்லன் கபீர் சிங்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதி ஹாசன நடித்து வருகிறார். மேலும் லட்சுமிமேனன் தங்கையாகவும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்படிப்பு நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் லட்சுமிமேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்தனர்.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகும் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் சிறுத்தை சிவா படமாக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு தளத்தில் அஜித் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடினார். இவர் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித்தை போல் வில்லன் கபீர் சிங் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். இன்று இப்படத்தின் ஷூட்டிங்கில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் படக்குழுவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions