இப்படி எல்லாம் இருந்தால் அஜீத்தை யாருக்கு தான் பிடிக்காது!

Bookmark and Share

இப்படி எல்லாம் இருந்தால் அஜீத்தை யாருக்கு தான் பிடிக்காது!

அஜீத்தை அனைவரும் கொண்டாட பல காரணங்கள் உள்ளது. ஒரு காலத்தில் அஜீத்தை அவரது ரசிகர்கள் மட்டும் தான் தல, தல என தலையில் வைத்து கொண்டாடினர்.

ஆனால் தற்போதோ திரை உலகினர், பிற நடிகர்களின் ரசிகர்களுக்கு கூட தல மீது தனி மரியாதையும், அன்பும் உள்ளது. இப்படி அனைவருக்கும் அஜீத்தை பிடித்துப் போக காரணம் இல்லாமல் இல்லை.

அவற்றில் திரை உலகினரே வியந்து சொல்லும் சில காரணங்கள் இதோ,அஜீத், தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் அன்பாக பழகுவார்.

அஜீத் தனது வீட்டுக்கு யார் வந்தாலும் தனது கையால் தான் காபி கொடுப்பார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு முதலில் சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு தான் பேசுவார்.அஜீத் தனது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரித்து அவர்கள் கிளம்பும்போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பார்.

அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார். அவர்கள் தங்க வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வேலைக்கு வந்து செல்ல வாகன வசதி செய்து கொடுத்துள்ளார்.

சக நடிகர், நடிகைகளை ஊக்குவிக்க தவறாதவர் அஜீத். அதே போன்று யார் சிறப்பாக நடித்தாலும் அவர்களை அவர் பாராட்ட மறப்பதும் இல்லை.

அடக்கம், அன்புடன் நடந்து கொள்வது, தான் ஒரு சினிமா நடிகன் என்ற பந்தா இல்லாமல் பொதுமக்களில் ஒருவராகவே நடந்து கொள்வது... இப்படி எல்லாம் இருந்தால் ஒரு பெரிய நடிகரை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்!


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions