காலில் விழுந்தால் அஜித்துக்கு பிடிக்காதாம்!

Bookmark and Share

காலில் விழுந்தால் அஜித்துக்கு பிடிக்காதாம்!

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனி மனிதனாக வந்து போராடி ஜெயித்தவர் அஜித். இப்போது அதிகப்படியான ரசிகர்களின் பேவரிட் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். தனது ரசிகர் மன்ற நபர்கள் இரண்டு பேர் அடித்துக்கொண்டார்கள் என்பதற்காகவே ரசிகர் மன்றம்கூட தனக்கு தேவையில்லை என்று கலைத்தவர் அஜித். ஆனபோதும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.மேலும், தன்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களோ அல்லது படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்பவர்களோ யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்று தனக்கு தெரியவந்தால், மாலையில் தான் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அந்த நபரை அழைத்து அவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அஜித்.

அப்படி அஜித் செய்த உதவியைப்பார்த்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த நபர்கள் அவரது காலில் விழுந்தால் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காதாம். உடனே அவர்களை தடுத்து, நான் என்ன கடவுளா? உங்களை மாதிரி நானும் சாதாரண மனுசன்தான். என் கால்ல ஏன் விழுறீங்க? என்று சொல்லி திட்டுவாராம்.

அதேசமயம் அவர்கள் தனது உதவியை வாங்கிக்கொண்டு தன்னை வணங்கினால் தானும் பதிலுக்கு அவர்களை கையெடுத்து வணங்கி வழியனுப்பி வைக்கிறாராம் அஜித்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions