அஜீத்திற்கு மூக்கில் ஆபரேஷன்!

Bookmark and Share

அஜீத்திற்கு மூக்கில் ஆபரேஷன்!

சைனஸ் பிரச்னை காரணமாக நடிகர் அஜீத்திற்கு மூக்கில் இன்று காலை ஆபரேஷன் நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதோடு இம்மாத துவக்கத்தில், அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த உற்சாகத்தில் இருக்கிறார் அஜீத். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அஜீத்திற்கு சைனஸ் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ’செப்டோபிளாஸ்டி மற்றும் பங்சனல் எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

பிரபல இஎன்டி நிபுணர் டாக்டர்.எம்.கே.ராஜ சேகர், அஜீத்திற்கு இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார். தற்போது அஜீத் நலமாக இருக்கிறார். உடல் நலம் முழுமையாக தேறிய பின்னர், ஏப்ரல் மாதம் முதல் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

பைக் ரேஸின் போது ஏற்பட்ட விபத்து, ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து என இதற்கு முன்னரும் சில ஆபரேஷன்களை செய்துள்ளார் அஜீத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions