லட்சுமி மேனனை காலேஜுக்கு அழைத்து சென்ற அஜித்

Bookmark and Share

லட்சுமி மேனனை காலேஜுக்கு அழைத்து சென்ற அஜித்

‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது அஜித்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றன. இந்நிலையில், முதன்முதலாக இப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் லட்சுமி மேனனை அஜித் காலேஜுக்கு அழைத்து செல்லும் படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது. லட்சுமிமேனன் சுடிதார் உடையில், கையில் ஒரு பையுடன் காலேஜூக்கு செல்லும் பெண் போல நிற்கிறார். அஜித் பச்சை நிற சட்டையும், வெள்ளை கலர் பேண்ட்டும் அணிந்து, கையில் ஒரு புத்தகத்துடன் நிற்கிறார்.

அஜித் நெற்றியில் திருநீறு அணிந்தும், தலைமுடியை தனது வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலிலும் வைத்துள்ளார். முகத்தில் தாடியை சவரம் செய்துள்ளார். மேலும், லேசான மீசையும் வைத்துள்ளார். 

அஜித்தின் இந்த ஸ்டைல் பெரும்பாலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் அஜித்தின் இந்த கெட்டப், பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. வேறு ஸ்டைலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions