அஜித்துக்காக துபாயில் இடம் பார்க்கும் ஏ.எம்.ரத்னம்

Bookmark and Share

அஜித்துக்காக துபாயில் இடம் பார்க்கும் ஏ.எம்.ரத்னம்

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் படமாக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இப்படத்திற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் துபாய் மற்றும் மஸ்கட்டில் லொக்கேஷன் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, துபாய் மற்றும் மஸ்கட்டில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘அசல்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களின் பெரும்பாலான காட்சிகள் துபாயில்தான் படமாக்கப்பட்டது.

அந்த வரிசையில் இந்த படத்திலும் சில காட்சிகளை துபாயில் படமாக்க அஜித் மற்றும் படக்குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions