அஜித்தை நெருங்க விடாத செக்யூரிட்டிகள்!

Bookmark and Share

அஜித்தை நெருங்க விடாத செக்யூரிட்டிகள்!

அஜித்தைப் பொறுத்தவரை ரொம்ப இயல்பான மனிதர். அனைவரையுமே சமமாக மதிக்கக்கூடியவர். இதற்கெல்லாம் மேலாக படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்குரிய எந்த சலுகைகளையும் பெறாமல் சராசரி நடிகர்களைப்போலவே இருப்பார்.

ஆனால் அவர் இப்படி நடந்து கொள்வதால், தங்களால் சலுகைகளைப் பெறமுடியவில்லையே என்று அவருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள்தான் மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் இப்படி ரொம்ப சாதாரணமாக அஜித் நடந்து கொண்டபோதும், அவரை அத்தனை எளிதில் படப்பிடிப்புகளில் சந்திக்க முடிவதில்லையாம். காரணம், பாதுகாப்பு என்ற பெயரில் பல செக்யூரிட்டிகளை அஜித் படப்பிடிப்புகளில் போட்டுள்ளார்களாம். அதனால் அஜித்தே வரவைக்கும் நபர்கள்கூட அவரை யூனிட்டிற்குள் சென்று சந்திக்க அரை மணி நேரமாவது ஆகிறதாம்.

காரணம், படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே நிற்கும் செக்யூரிட்டிகள் செல்லும் நபரை பரிசோதனை செய்வதோடு, அஜித் ரொம்ப பிசியாக இருப்பதாக அவர்களாகவே சொல்லி வெயிட் பண்ண வைத்து விடுகிறார்களாம்.

அதையடுத்து, நான் வரசொன்ன நபரை இன்னும் காணவில்லையே என்று அஜித்தே தேடும்போதுதான் அந்த நபர் செக்யூரிட்டி பாய்ண்டில் இருக்கிற விவரம் அவருக்கு தெரிய வருமாம். அதையடுத்து, அஜித்தே ஓடிவந்து அவர்களை சந்திப்பாராம். இப்படித்தான் சமீபகாலமாக அஜித்தை சந்திக்க செல்லும் முக்கிய சினிமாக்காரர்கள்கூட செக்யூரிட்டிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறார்களாம்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions