அஜித்தை சந்திக்க சென்ற பிரபல ஹீரோ விரட்டியடிப்பு!

Bookmark and Share

அஜித்தை சந்திக்க சென்ற பிரபல ஹீரோ விரட்டியடிப்பு!

அஜித்திற்கு ஐஸ் வைத்து அவரின் ரசிகர்களின் அன்பை அப்படியே ரவுண்டு கட்டி அறுவடை பண்ணிவிட வேண்டும் என்று பல காலமாகவே திட்டம் போட்டு செயல்பட்டு வரும் சிம்புவில் ஆரம்பித்து, அண்மையில் யட்சன் படத்தில் அஜித்தின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி கொண்டாடிய ஆர்யா, ஜெய், பிரேம்ஜி, வைபவ் வரை என இளவட்ட நடிகர்கள் கூட்டமே அஜித் புராணம் பாடுகிறது.

இயக்குனர் சிவா, கடந்த சில நாட்களாக பேட்ச் வொர்க் என்று சொல்லப்படும் விட்டுப் போன பகுதிகளை வெகு ஜரூராக படமாக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையிலிருக்கும் மோகன் ஸ்டூடியோவில் நடக்கும் இந்த படப்பிடிப்பிற்கு டைரக்டர் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுகிறாராம் அஜித். அதே ஸ்டூடியோவுக்கு அருகில் ரஜினியின் கபாலி படத்திற்காகவும் பிரமாண்டமான மலேசியா செட் ஒன்று தயாராகி வருகிறது.

அவர்கள் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன் இந்த படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறாராம் சிவா. இந்நிலையில் நேற்று அஜித்தை சந்திக்க மோகன் ஸ்டூடியோவுக்கு வைபவ் சென்றுள்ளார். இவர் பல படங்களில் ஹீரேவாக நடித்து வருகிறார்.

என்ன காரணத்திற்காக அஜித்தை சந்திக்க சென்றாரோ? வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாராம். “நான் வந்துருக்கேன்னு அவருகிட்ட சொல்லுங்க. நிச்சயம் என்னை கூப்பிடுவாரு” என்று வைபவ் சொல்ல, “எதுவா இருந்தாலும் நீங்க அவரை வீட்ல போய் பாருங்க. இங்க நாங்க அலோவ் பண்ண முடியாது” என்றார்களாம் வாசலில் நின்ற பொறுப்பாளர்கள். கெஞ்சி, போராடி கடைசியில் திட்டி ஓய்ந்தவர், “தலக்கு மட்டும் இது தெரிந்தால் உங்களையெல்லாம் சும்மாவிட மாட்டார்” என்று கதறிக் கொண்டே கிளம்பினாராம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions