சண்டைக் காட்சியில் விபத்து அஜித்துக்கு காயம்

Bookmark and Share

சண்டைக் காட்சியில் விபத்து அஜித்துக்கு காயம்

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் அஜித் மற்றும் வில்லன் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட அஜித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

பின்னர் டாக்டர்கள் அஜித்தை ஓய்வு எடுக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் அஜித் ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பை ரத்து செய்து ஓய்வெடுத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று கூறி அஜித் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த படக்குழுவினர் அஜித்தின் தொழில் பக்தியை கண்டு நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions