எதையும் கண்டுகொள்ளாத அஜீத்!

Bookmark and Share

எதையும் கண்டுகொள்ளாத அஜீத்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது இதற்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள்,  இசைக்கலைஞர்கள்,தொழில் நுட்பக் கலைஞர்கள் என யாரும் விதிவிலக்கில்லை.

ரஜினி, கமல், விஜய் முதல் வடிவேலு வரை முன்னணி நடிகர்களும் இளையராஜா தொடங்கி அனிருத் வரை இசையமைப்பாளர்களும் இதில் அடக்கம். கமல், தகனம் நடந்த மயான மைதானத்தில் இரண்டரை மணிநேரம் இருந்தார்.

இவை எல்லாம் பேசப்பட்டது போல அனைவராலும் பேசப்பட்ட முணு முணுக்கப்பட்ட இன்னொரு செய்தி அஜீத் இதில் கலந்து கொள்ள வரவில்லை என்பதுதான். அஜீத் ஊரில் இல்லை என்றாலும் இரங்கல் செய்தியாவது வெளியிட்டு இருக்கலாமே. சமீபத்திய ஆண்டுகளில் அஜீத் எந்த நிகழ்ச்சிகளுக்கும் வெளியே வருவதில்லை.

சம்பந்தமில்லாத ரசிகர்களே திரளாக வந்து அஞ்சலி செலுத்திய போது அஜீத் மட்டும் ஏன் வரவில்லை? இத்தனைக்கும் அவர் நடித்த காதல் மன்னன் படத்தில் எம்.எஸ்.வி. தோன்றி நடித்தும் படத்தின் விளம்பரத்துக்கு உதவியிருக்கிறார். எம்.எஸ்.வி.நடித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  

எம்.எஸ்.விக்கு மட்டுமல்ல இயக்குநர் சிகரம் பாலசந்தர் மறைந்த போதும் அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ அஜீத் வரவில்லை. பாலுமகேந்திரா மறைந்த போதும் அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ வரவில்லை. . ர

ஜினி, கமலே அவர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு தவறாமல் வருகிறார்கள். மீடியாக்களுடன் உரையாடுகிறார்கள்.ஆனால் சமீப ஆண்டுகளில் அஜீத் தனது படத்தின் ப்ரமோஷனுக்கும் வருவது கிடையாது.

தன் படத்து விளம்பரம் ப்ரமோஷன் எல்லாவற்றுக்கும் வரவேண்டியது ஒரு கதாநாயகனின் பொறுப்பு அல்லவா?  ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் என வட இந்தியாவிலிருந்தெல்லாம் ப்ளைட் பிடித்து சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு தவறாமல் வருகிறார்கள். ஆனால் அஜீத் எதிலும் கலந்து கொள்வதில்லை. இப்படி தவிர்ப்பது சரியா? இனியாவது அவர் போக்கில் மாற்றம் வருமா? 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions