கோல்கட்டாவில் அஜித், ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

கோல்கட்டாவில் அஜித், ஸ்ருதிஹாசன்!

அஜித், ஸ்ருதிஹாசன் முதன் முறையாக இணைந்து நடிக்க 'வீரம்' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் ஆரம்பமாக உள்ளது.

சென்னையில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து பாடல்களைப் படமாக்குவதற்காக இத்தாலிக்குப் பயணமானது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கோல்கட்டாவில் சில வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கோல்கட்டாவைச் சேர்ந்த டாக்சி டிரைவராக நடிக்கிறாராம். சென்னையில் கூட கோல்கட்டா போன்ற அரங்கங்களை அமைத்து அங்கு சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

லட்சுமி மேனன் இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை பாட்ஷா படத்தின் உல்டா என்று கூட படம் ஆரம்பமான போது தகவல்கள் வெளியாகின.

ஆனால், படப்பிடிப்புக் குழுவினர் அதை மறுத்தனர். இருந்தாலும் இந்தப் படம் ஒரு தாதா கதைதான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்பாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் படத்தை எப்படியும் தீபாவளிக்கு வெளியிட்டுவிடுவார்கள் என்றே தெரிகிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions