மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !

Bookmark and Share

மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !

ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும் ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் இப்படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் , தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் டி.இமான் , பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் ,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது, நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ்.ரவி குமார் அவர்களின் இசை வெளியீட்டு விழாவில் நான் அவர் அருகில் அமர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ரெமோ படத்தின் படபிடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவி குமார் அவர்கள் கலந்து கொண்டு எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார்.

ரெமோ படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில் அது எனக்கும் பெரிதும் உதவியது. வரலாறு படத்தில் அஜித் அவர்கள் கடைபிடித்த சில விஷயங்களை எனக்கு கற்று கொடுத்து ரெமோ படத்தில் வரும் பெண் வேடத்தை மேலும் மெருகேற்றினார்.

டப்பிங்கில் நான் பெண் வேடத்துக்கு பேசும் போது இவ்வாறு பேச வேண்டும் என சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். இக்கால ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான மிக சிறந்த படைப்பாக முடிஞ்சா இவன புடி நிச்சயம் இருக்கும். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அது எனக்கு நன்றாக இருக்கிறது.

நான் மேடைக்கு வரும் போது விஜய் சேதுபதி அண்ணன் என்னை பார்த்து “சிவா நீ சூப்பர் பிகர் “ என்று கூறினார். முன்னர் பேசிய மதன் கார்க்கி அவர்கள் என்னை “பெண் “ வேஷம் போட்டு கொண்டு வந்திருக்கலாம் என்று கூறினார் என்று நகைச்சுவை கலந்து பேசினார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions