தங்கச்சியின் சம்பளத்தை உயர்த்த சொன்ன அஜித்!

Bookmark and Share

தங்கச்சியின் சம்பளத்தை உயர்த்த சொன்ன அஜித்!

கோலிவுட்டைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே அவர்களின் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி விடுவார்கள்.

அந்த வகையில், முதல் படத்தில் 3 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகைகூட மூன்றாவது படத்திலேயே 30 லட்சம் வாங்குவார்கள்.

அடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானதும் 50, 60 லட்சமாக உயர்த்தி விடுவார்கள். அதேசமயம், வில்லேஜ் கதைகளில் நடிக்கும் நடிகைகளுக்கு அப்படி யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும்கூட 5 லட்சம் கொடுக்கவே யோசிப்பார்கள்.

இந்த நிலைதான், இதுவரை லட்சுமிமேனன் விசயத்திலும் இருந்து வந்தது. அவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என பல படங்கள் ஹிட்டானபோதும், வில்லேஜ் நடிகை என்கிற ஒரே காரணத்திற்காக அவருக்கு குறைவான சம்பளமே கொடுத்து வந்தனர்.

ஆனால், இந்த நிலை வேதாளம் படத்திற்கு பிறகு அடியோடு மாறி விட்டது. காரணம், அந்த படத்திற்கு 20 லட்சம் சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், விசயம் அஜித்தின் காதுக்கு சென்றபோது இன்னும் கூடுதலாக கொடுக்குமாறு கூறினாராம்.

அதனால் இப்போது லட்சுமிமேனன் கேட்காமலேயே ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் மிருதன் படத்தில் லட்சுமிமேனனுக்கு 40 லட்சம் சம்பளம் பேசியுள்ளனர்.

அட்வான்ஸ் பண்ணும்போதே 25 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டதாம். படத்தில் நடித்து முடிப்பதற்குள் மீதமுள்ள 15 லட்சமும் கொடுக்கப்பட்டு விடுமாம். ஆக, இந்த படமும் வெற்றி பெற்று விட்டால் அடுத்து கமிட்டாகும் படத்தில் லட்சுமிமேனனின் சம்பளம் 50 லட்சமாகி விடும் என்கிறார்கள்.

லட்சுமிமேனனின் இந்த அதிரடி சம்பள உயர்வைப்பார்த்து குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிராமத்து கதைகளில் அதிகமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்ட நடிகைகள் தாங்களும் சம்பளத்தை உயர்த்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions