அஜித்தின் புது யோசனை

Bookmark and Share

அஜித்தின் புது யோசனை

அஜித்  நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் லாபம் பெறவேண்டுமென்றால் அதிகப்படியான தியேட்டர்களில் படங்களை வெளியிட்டால் மட்டுமே முடியும் என்கிற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்கள்கூட ஓரிரு வாரங்கள் ஓடுவதே அரிதாகி விட்டதே இதற்கு முக்கிய காரம். விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் அண்டை மாநிலங்களிலும் தங்களுக்கான ரசிகர்களை அதிகப்படுத்தி வைத்துள்ளதும் அதனால்தான்.  

விஜய்க்கு தமிழ்நாட்டைப்போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் தமிழ்நாட்டுக்கு இணையான வசூலை கேரளாவில் எடுத்து விடுகின்றனர்.

அதேபோல் சூர்யாவுக்கு தமிழ்நாட்டைப்போலவே ஆந்திராவில் ரசிகர்கள் உள்ளதால் அவரது படங்கள் ஆந்திராவிலும் அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் அஜித் படங்கள் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிதாக வசூலிப்பதில்லை.

கேரளாவில் ஓரளவு வசூலிக்கிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர் பட்டியலில் அஜித் இருக்கிறாராம். அவர் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லரை ஏராளமானோர் பார்த்திருக்கிறார்களாம்.

இதையறிந்து, தமிழ் நாட்டைப்போலவே கேரளா, ஆந்திராவிலும் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டிருந்த அஜித்துக்கு இப்போது கர்நாடகத்தின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

அங்குள்ள ரசிகர்களை மனதில் கொண்டு தனது அடுத்த படத்தை கர்நாடகாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் யோசனையில் இருக்கிறார்அஜித்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions