அஜித்துடன் நடிப்பது மட்டுமே என் கனவு- ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

அஜித்துடன் நடிப்பது மட்டுமே என் கனவு- ஸ்ருதிஹாசன்!

சினிமாவில் நடிக்க வரும் எல்லோருக்குமே ஏதாவது ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகள் சிலருக்கு கைகூடும். ஆனால் பலருக்கு நிறைவேறாது. அந்த வகையில், ஸ்ருதிஹாசனுக்கு சினிமாவில் நடிகையானதில் இருந்தே ஒரே ஒரு கனவு தானாம். 

அது அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது. ஆனால் அதற்காக அவர் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதேசமயம், தமிழ் சினிமாவில் நாம் முன்னணி நடிகையாக வளர்ந்தால் தான் அஜீத் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்தி, தெலுங்கு படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டு தமிழுக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

விஜய்யுடன் புலி பட வாய்ப்பு கிடைத்த பிறகுதான் இனிமேல் அஜீத் படத்திற்கான முயற்சியை எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை டைரக்டர் சிவா அவரை தொடர்பு கொண்டு வேதாளம் படத்திற்கு புக் பண்ணியிருக்கிறார். 

இதனால் மிகப்பெரிய சந்தோசமடைந்திருக்கிறார் ஸ்ருதி. அதையடுத்து வேதாளம் படத்தில இதுவரையில்லாத அளவுக்கு உற்சாகமாக நடித்து முடித்திருப்பவர், “அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகி விட்டது.

அந்த வகையில், வேதாளம் எனக்கு ரொம்ப ஸ்பெசல் படம். இந்த படத்தில் அஜீத்துடன் பணியாற்றிய அனுபவங்களை ஒருபோதும் மறக்க முடியாது” என்று கூறுகிறார் ஸ்ருதி.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions