அஜீத் படத்தில் ஸ்ருதிக்கு வக்கீல் வேடம்?

Bookmark and Share

அஜீத் படத்தில் ஸ்ருதிக்கு வக்கீல் வேடம்?

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதையின் பெரும்பகதி கொல்கத்தாவில் நடப்பது போல இருந்தாலும் முதல்கட்டப்பிடிப்பை சென்னையிலேயே கொல்கத்தா போன்ற அரங்கு அமைத்து எடுத்துவிட்டார்கள்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்து முடிந்தது. அதற்கடுத்து அண்மையில் கொல்கத்தாவில் இந்தப்படத்தின் மூன்றாவது கட்டப்படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இதில் அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் இலட்சுமிமேனன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தில் அஜித் வாடகைக்கார் ஒட்டுநராக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. 

நாயகி ஸ்ருதிஹாசனும் வாடகைக்கார் ஓட்டுநராகவே நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இப்போது கொல்கத்தாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் வழக்குரைஞர்கள் அணியும் கறுப்புஅங்கி அணிந்து நடித்துக்கொண்டிருக்கிறாராம். இதனால் படத்தில் அவர் வழக்குரைஞர் வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

கொல்கத்தாவின் சாலைகள் மற்றும் முக்கியஇடங்களில் படப்பிடிப்பு நடப்பதால் படக்காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions