சரித்திர கதையில் அஜித்தும் நடிக்கவுள்ளார்

Bookmark and Share

சரித்திர கதையில் அஜித்தும் நடிக்கவுள்ளார்

நடிகர் திலகம் சிவாஜி காலத்திற்கு பிறகு சரித்திரப் படங்கள் வருவது குறைந்து விட்டது. அவ்வப்போது  ஓரிரு படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன.

ஆனால், எப்படி பழைய ஹீரோக்களின் பாணிக்கு இப்போதைய ஹீரோக்கள் மாறி வருகிறார்களோ அதேபோல் பழைய சரித்திர கதைகளை படமாக்குவதில் இப்போதைய இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு பிள்ளையார் சுழி போட்டது பாகுபலி, ருத்ரமா தேவி படங்கள்தான். அப் படங்கள் உருவாகிக்கொண்டிருந்தபோதே, விஜய்யிடம் புலி படத்தின் கதையை சொன்னார் சிம்புதேவன்.

ஏற்கனவே வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற சரித்திர  படத்தை அவர் இயக்கியவர் என்பதால், விஜய்க்கும் அவர் சொன்ன புலி  படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

500 வருடங்களுக்கு பின்னோக்கி சென்று சித்ர குள்ளன் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்று அவர் சொன்ன யுக்தி தன்னை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பமாக நினைத்த விஜய், அந்த படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளார். புலி படத்தின் டீசர், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பாகுபலி படமும் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது.இவைகளைப் பார்த்து இப்போது அஜித்தையும் சரித்திர கதையில் நடிக்குமாறு அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அவரின் முந்தைய இயக்குனர்கள் சிலரே அவரிடம் சரித்திர நாவல்களை படமாக்குவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

ஷாரூக்கான் நடித்த அசோகா படத்தில் மட்டுமே சரித்திர கதையில் நடித்திருக்கும் அஜித்தின் அடுத்த படமேகூட சரித்திர கதையாகயிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions