தலைகவசம் - அஜித் படத்தை பயன்படுத்திய கோவை போலீஸ்

Bookmark and Share

தலைகவசம் - அஜித் படத்தை பயன்படுத்திய கோவை போலீஸ்

கார் மற்றும் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அஜித். அதுமட்டுமல்ல, போக்குவரத்து விதிகளை மதிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளே இல்லை. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது என போக்குவரத்து விதிகளை மிகச்சரியாய் கடைபிடிப்பார் அஜித். சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூர், அங்கிருந்து புனே வரை பைக்கிலேயே சென்று வந்தார். அந்தப்  பயணத்தை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டார்.

தற்போது ஜூலை முதல் தேதியிலிருந்து தலைக்கவசம் கட்டயாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகர காவல்துறை நகரமெங்கும் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் செல்லும் அஜித்தின்படத்தைப் பயன்படுத்தி உள்ளது.

இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் கவன ஈர்ப்பைப் பெறுவதோடு நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் நம்புகிறது கோவை காவல்துறை. நடிகனின் பிரபலம் இப்படி நல்ல விஷயத்துக்கு மட்டும்தான் பயன்பட வேண்டும்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions